வானத்தில் ஒரு தவளைக் குடும்பம் வசித்து வந்தது.
அம்மா தவளை சந்தோஷமாகக் குதித்துச் சொன்னது, "இந்தப் பூமி இருப்பது தவளைகளுக்காக. இந்தக் காற்று இருப்பது தவளைகளுக்காக. நீர்நிலை, தாவரங்கள், புழுக்கள், பூச்சிகள் எல்லாம் இருப்பது தவளைகளுக்காக!"
குட்டித் தவளைகளும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு குதித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு அங்கே ஊர்ந்து வந்தது. லபக்லபக் என்று இரண்டு தவளைகளைப் பிடித்துத் தின்றது.
மற்ற தவளைகள் ஓடி ஒளிந்துகொள்ள, பயந்துபோன குட்டித் தவளையிடம் அம்மா சொன்னது, 'பாம்புகள் இருப்பதும் தவளைகளுக்காகத்தான்!'
விளக்கம்:
மரணம் என்ற முடிவை ஏற்க முடிந்தவர்களால்தான் வாழ்க்கையை முழுமையாக ரசிக்க முடியும். எந்த நேரம் வேண்டுமானாலும் நிறுத்தத்துக்கு வரலாம் என்பது தெரிந்திருந்தால்தான், ஒவ்வொரு சுவாசத்தின் மதிப்பையும் உணர்ந்து அனுபவிக்க முடியும். உண்ணும் ஒவ்வொரு கவளத்தையும் சுவைத்து உண்ண முடியும். அருந்தும் ஒவ்வொரு துளி நீரையும் ரசித்து அருந்த முடியும்.
இப்போது கிடைத்திருப்பது எதுவும் நிலைத்து இருக்காது என்பதை அறிந்திருந்தால்தான் அதை ஆழமாக ரசிக்க முடியும். முடிவுஇல்லாமல் ஒன்று தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று இருந்தால், அதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
நீங்கள் நடக்கும் மண், உங்களைத் தழுவிச் செல்லும் தென்றல், உங்கள் மீது விழும்மழைத் துளி, உங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் சூரியன் எல்லாமே தற்காலிகமானவைதான் என்பதை அறிந்திருந்தால்தான் அவற்றின் மதிப்பை நீங்கள் பூரணமாக உணர முடியும். ஆனந்தமாக அனுபவிக்க முடியும்.
எந்தப் பூமி புசிப்பதற்கு உங்களுக்கு உணவு தந்துகொண்டு இருக்கிறதோ, அதே பூமி ஒரு நாள் உங்களையே சாய்த்து, உணவாகப் புசிக்கப்போகிறது. இந்தச் சுழல் தவிர்க்க முடியாதது. வாழ்க்கையை விழிப்பு உணர்வு என்ற ஜன்னல் மூலம் பார்த்து, இதை உணரும் திறன் மனித இனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தச் சுழலில் சிக்கியிருக்கும் வரை, எந்த இலக்கையும் எட்ட முடியாமல், ஒரே இடத்தில் வட்டமடித்துக்கொண்டே இருக்க நேரும் என்பதை விளங்கிக்கொண்டால்தான், அதை உடைத்து வெளியேற வேண்டும் என்ற தேடல் பிறக்கும். இயல்பாகவே ஆன்மிகத்துக்கான விழிகள் திறக்கும்.
உண்பது, நடப்பது, சுவாசிப்பது போன்ற அடிப்படையான அம்சங்கள் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் மென்மையான உணர்வுகளைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்றால், வாழ்க்கையின் மிகப் பெரும் அம்சங்களையும் நீங்கள் நிச்சயம் தவறவிடுவீர்கள்.
இந்த இரண்டு உண்மைகளையும் தன்னுள் பொதித்திருக்கிறது இந்த கதை!
புதன், 6 ஜனவரி, 2010
வளமாக வாழ்வது
உங்கள் கருத்தில் வளமாக வாழ்வது என்றால் என்ன? சொந்தத்தில் ஒரு வீடு, ஆசைப்பட்ட கார், அணிவதற்கு விலை உயர்ந்த உடைகள் போன்றவைதானே? இப்படி அமெரிக்கச் சிந்தனைகளைவைத்து வளமாக வாழ்வதன் அளவுகோல்களை முடிவுசெய்யாதீர்கள். சமூகத்தில் எதைக் கொண்டாடுகிறார்களோ, அதை நீங்கள் சொந்தம் ஆக்கிக்கொள்வதா வளம்?
இங்கே பெரிய பங்களாவாகத் தோன்றுவது, வேறு ஒரு நாட்டில் சிறு வீடாகத் தோன்றக்கூடும். எனவே, உண்மையான வளம் அது அல்ல. உண்மையில், வளமாக வாழ்வது என்றால், ஆனந்தமாக வாழ்வது என்று அர்த்தம். உங்களிடம் என்ன இருக்கிறது என்பது இந்த வளத்தைத் தீர்மானிப்பதில்லை. எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான் அதைத் தீர்மானிக்கிறது

வருவதும் போவதும்
ஒரு ஜென் துறவி மரணப்படுக்கையில் இருந்தார். அவரைப் பார்க்க சாங்சு என்ற இன்னொரு குரு வந்திருந்தார்
''இப்பிறவியைக் கடப்பதற்கு உங்களுக்கு என் உதவி தேவையா?'' என்று சாங்சு கேட்டார்.
''இது தானாக வருகிறது... தானாகப் போகிறது. உங்களால் இதில் என்ன உதவி செய்ய முடியும்?'' என்று கேட்டார், மரணத்தை நெருங்கிக்கொண்டு இருந்த துறவி.
''அதுதான் உங்கள் பிரச்னையா? வருவது, போவது என்று எதுவும் இல்லை என்பதை உணர்வதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது'' என்றார் சாங்சு.
அந்தத் துறவிக்கு உடனே விளங்கியது. புன்னகையுடன் உயிர் நீத்தார்.
விளக்கம்:
ஆம், வருவது போவது என்று பேசுவதே மாபெரும் வேடிக்கைப் பேச்சு. உண்மையில் வருவது போவது என்பதே இல்லை. எல்லாம் ஒருவிதப் பிரமைதான்.
சுழற் காற்றில் சிக்கி இருக்கிறீர்களா? அது இயக்கத்தில் இருக்கும்போது, மரம், வாகனம், வீடு என்று எல்லாவற்றையும் சுழற்றி எடுத்துக்கொண்டு அலையும். அத்தனை உண்மையாகத் தோற்றம் அளிக்கும். இயக்கம் முடிந்ததும், சட்டெனக் கலைந்து, இருந்த இடம் தெரியாமல் கரைந்துவிடும். அதே போல், கடலில் மாபெரும் அலை எழும்புகிறது. அடுத்த நிமிடம் அந்த அலையைக் காணவில்லை. அது எங்கே போனது?
புயலும், சுழற்காற்றும், அலையும் போல எல்லாமே இந்தப் பிரபஞ்சத்தில் நேரும் வெறும் நிகழ்வுகள்தாம்.
இப்பூவுலகில், சக்தி வெவ்வேறு வடிவங்களில் மையம்கொள்வதும், கலைந்து கரைந்துவிடுவதும்தான் நிகழ்கிறதே தவிர, எதுவும் எங்கே இருந்தும் வரவில்லை. எங்கேயும் போகப் போவதும் இல்லை.
வந்ததாக நினைத்துவிட்டால், இதன் மீதும், போவதாக நினைத்துவிட்டால், அதன் மீதும் பற்று ஏற்பட்டுவிடும். நீங்கள் போவதற்கு எந்த இடமும் இல்லை என்பதை உணர்ந்து இங்கே முழுமையாக இருங்கள். முழுமையாக இங்கேயே கரைந்துபோங்கள்!

மாற்றம்
உண்மையில், மாற்றம் இல்லாமல் எதுவும் இங்கே இயங்கவில்லை. நேற்று பார்த்த சூரியனில் இருந்து இன்று பார்க்கும் சூரியன் மாறுபட்டுத்தான் இருக்கிறது. இந்தத் தருணம் புதியது. சென்ற கணத்தில் இல்லாதவிதமாக எங்கோ ஓர் இலை உதிர்ந்திருக்கும். எங்கோ ஒரு விதை முளைத்திருக்கும். இந்தத் தருணத்தில், சென்ற வருடமோ, நேற்றோ, ஏன் கடந்து போயிற்றே ஒரு நொடி அதைக்கூட உங்கள் அனுபவத்தில் உணர இயலாது.
உற்சாகமோ, சலிப்போ எதுவானாலும் அது உங்கள் மனதின் உருவாக்கம்தான். நீங்கள் மனதால் வாழ்ந்துகொண்டு இருப்பதால், நேற்று செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வது போன்ற ஓர் உணர்வு உங்களைத் தாக்குகிறது.
நேற்று என்பது நினைவு. நேற்று மேகங்கள் எப்படி எங்கெங்கே இருந்தன என்பதை வானம் பதிவுசெய்து வைத்துக்கொள்வது இல்லை. எவ்வளவு அலைகளைக் கரை மீது மோதினோம் என்று கடல் எழுதிவைத்துக்கொள்வது இல்லை. பிரபஞ்சத்தில் எங்கு பார்த்தாலும், நிகழ்வுகள் அதிகபட்சம் தடயங்களைப் பதிவுசெய்துவிட்டுப் போகின்றனவே தவிர, நினைவுகளாக சுமையாகி அழுத்துவதே இல்லை.
இயற்கையில் எதுவும் பழையது இல்லை. ஒவ்வொன்றும் புதியதுதான். விஞ்ஞானமும் அதையேதான் சொல்கிறது. ஒரு பாறைகூட, அதற்குரிய அதிர்வுகளை வெளிப்படுத்தித் தன்னைக் கணத்துக்குக் கணம் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)